சித்திரை திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல்


சித்திரை திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல்
x
தினத்தந்தி 17 April 2022 1:54 PM IST (Updated: 17 April 2022 1:54 PM IST)
t-max-icont-min-icon

மதுரை சித்திரை திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் விழா நேற்று கோலாகலமாக நடந்தது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கள்ளழகர் தங்கக்குதிரையில் அமர்ந்து வைகை ஆற்றுக்கு வருவதை பார்க்கவும், உடன் வரவும் தல்லாகுளம் முதல் கோரிப்பாளையம், பனகல் சாலை, செல்லூர் பகுதியில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர்.

அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, அதில் சிக்கி ஒரு பெண்ணும், ஆணும் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர். சற்று நேரத்தில் அவர்கள் 2 பேரும் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டவர்கள் மயங்கி விழுந்து காயம் அடைந்தனர். அவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சை்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரை சித்திரை திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக கவர்னர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

மதுரை,சித்திரைத் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கவர்னர், ஆர்.என்.ரவி, ஆழ்ந்த இரங்கலையும்,  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

Next Story