அரசு பணியிடங்களை நிரப்ப வேண்டியது கட்டாயம்


அரசு பணியிடங்களை நிரப்ப வேண்டியது கட்டாயம்
x
தினத்தந்தி 17 April 2022 7:55 PM IST (Updated: 17 April 2022 7:55 PM IST)
t-max-icont-min-icon

பணி ஓய்வு பெறுவோர் அதிகம் உள்ளதால் அரசு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று சிவா எம்.எல்.ஏ. கூறினார்

பணி ஓய்வு பெறுவோர் அதிகம் உள்ளதால் அரசு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று சிவா எம்.எல்.ஏ. கூறினார்.
பயிற்சி மையம்
பாகூர் தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில், புதுச்சேரி அரசின் வேலைவாய்ப்புக்கான இலவச பயிற்சி மையத்தின் தொடக்க விழா எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில், கோதண்டம் வரவேற்றார். செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, வேலைவாய்ப்பு போட்டி தேர்வுக்கான பயிற்சி மையத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-  சட்டசபையில் தி.மு.க. சார்பில் அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இந்த ஆண்டு இல்லாவிட்டாலும், அடுத்த ஆண்டு 10 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது கட்டாயம்.
பற்றாக்குறை
அரசு துறைகளில் பணி ஓய்வு பெறுவோர் அதிகமாக உள்ளனர். குறிப்பாக, எல்.டி.சி., யூ.டி.சி., பற்றாக்குறை உள்ளது. துணைதாசில்தார் எடுத்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. காவல் துறையில் குறைந்த அளவிலேயே பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இன்னும், ஊர்க்காவல் படை, ஐ.ஆர்.பி.என். உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் எடுக்க வேண்டி உள்ளது.
எனவே, இந்த பயிற்சி மையத்தை பயன்படுத்தி இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற வேண்டும். பாகூர் தொகுதி வளர்ச்சியை நோக்கி செல்கிறது. இது அடுத்த ஆண்டு தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இம்மையத்தில், புதுச்சேரி அரசின் எல்.டி.சி., யூ.டி.சி., உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் துணை தலைவர் தவமுருகன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பாஸ்கரன், அரி, கிரி, பிரகாசம், கீர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். தி.மு.க., தொகுதி செயலாளர் பாண்டு அரிக்கிருஷ்ணன் நன்றி கூறினார்.

Next Story