3 பேருக்கு தொடர் சிகிச்சை
புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் 3 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 206 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் ஒருவருக்குக்கூட தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. தற்போது ஏற்கனவே தொற்று பாதித்த 3 பேர் காரைக்காலில் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
நேற்று முதல் தவணை தடுப்பூசியை 198 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 681 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 183 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 16 லட்சத்து 62 ஆயிரத்து 645 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story