குடும்பத் தகராறில் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை


குடும்பத் தகராறில் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 18 April 2022 2:35 AM IST (Updated: 18 April 2022 2:35 AM IST)
t-max-icont-min-icon

குடும்பத் தகராறில் கணவன்-மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆலந்தூர் சன்னியாசி சுபேதர் தெருவில் வசித்து வந்தவர் மணிகண்டன் (வயது 36). மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இதற்கிடையில், கணவரை பிரிந்து வாழும் சுகாஷினி (32) என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் மணிகண்டன், சுகாஷினி இருவரும் கணவன்-மனைவிபோல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது.

மனைவி தற்கொலை

இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், சுகாஷினியை அடித்து விட்டு வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். இதில் மனமுடைந்த சுபாஷினி, தனது துப்பட்டாவால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பரங்கிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார், சுபாஷினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கணவரும் தூக்கில் தொங்கினார்

இதற்கிடையில், மனைவியை தாக்கி விட்டு மாங்காடு அண்ணா தெருவில் உள்ள தனது தாய் வீ்ட்டுக்கு சென்ற மணிகண்டன், அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாங்காடு போலீசார், மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story