நீட் தேர்வு மசோதா: ஜனாதிபதிக்கு அனுப்ப கவர்னர் ஆர்.என்.ரவி முடிவு?
நீட் தேர்வு மசோதாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைக்க கவர்னர் ஆர்.என்.ரவி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
சென்னை,
நீட் தேர்வு மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கவில்லை என கூறி, கவர்னர் ஆர்.என். ரவியின் தேநீர் விருந்தை தமிழக அரசு, தி.மு.க .கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் புறக்கணித்தன.
இந்த நிலையில், நீட் தேர்வு மசோதாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைக்க கவர்னர் ஆர்.என்.ரவி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
நீட் விலக்கு மசோதா தொடர்பான தமது பரிசீலனை மற்றும் குறிப்பேடு பணிகள் முடிவு பெற்றுள்ளதால் அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க கவர்னர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பான விவரங்களை முறைப்படி முதல்-அமைச்சரின் அலுவலகத்திற்கு தெரிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நீட் தேர்வு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதால் கவர்னருக்கும், அரசுக்கும் உள்ள மோதல் போக்கு சற்று குறையும் என கூறப்படுகிறது.
நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வகை செய்யும் சட்ட மசோதா கடந்த பிப்.8-ந் தேதி பேரவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story