“இளையராஜாவுக்கு கருத்து சுதந்திரம் இல்லையா?” - நடிகை குஷ்பூ கேள்வி


“இளையராஜாவுக்கு கருத்து சுதந்திரம் இல்லையா?” - நடிகை குஷ்பூ கேள்வி
x
தினத்தந்தி 18 April 2022 11:21 AM IST (Updated: 18 April 2022 11:21 AM IST)
t-max-icont-min-icon

இளையராஜாவுக்கு கருத்து சுதந்திரம் இல்லையா என்று நடிகை குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

புத்தக முன்னுரை ஒன்றில் 'பிரதமர் மோடியின் ஆட்சியைக் கண்டு அம்பேத்கர் பெருமைப்படுவார்' என்று இசையமைப்பாளர் இளையராஜா பேசினார். பிரதமர் மோடி, அம்பேத்கர் ஒப்பீடு குறித்த இளைராஜாவின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பெரும் விவாதமும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், இசையமைப்பாளர் இளைராஜா மீது எழுந்து வரும் விமர்சனங்கள் குறித்து சென்னை, பட்டினப்பாக்கத்தில் நடிகை குஷ்பூ கூறியதாவது:-

மத்திய அரசு கருத்து சுதந்திரம் அளிக்கவில்லை என்று இடதுசாரி எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

ஆனால் இன்று அம்பேத்கர் - மோடி குறித்த இளையராஜாவின் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கருத்துச் சுதந்திரம் கேட்கும் எதிர்க்கட்சிகள் ஏன் இளையராஜாவின் கருத்தை ஏற்க முடியவில்லை?, எதிர்ப்பு தெரிவிப்பதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story