ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு...!


ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு...!
x
தினத்தந்தி 18 April 2022 1:36 PM IST (Updated: 18 April 2022 1:36 PM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 26-ந் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 2022-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் பணியாளர் தேர்வு ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி விண்ணப்பிக்க கால அவகாசம் கடந்த 13ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. 

இருப்பினும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது இணையதளத்தில் சில இடர்பாடுகள் இருந்ததாகவும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது. மேலும் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடையும் நிலையில்,  ஏப்ரல் 26ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு http://www.trb.tn.nic.in/ என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Next Story