சென்னையில் மெல்ல அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு ...! மக்களே எச்சரிக்கை...!
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மெல்ல குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பானது, ஏப்ரல் 11 முதல் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
சென்னை:
சென்னையில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று காலை நிலவரப்படி 99 பேர் சிகிச்சைபெற்று வருகிறார்கள்.
ஒரு சில எண்ணிக்கைகளே அதிகரித்தாலும் பொது இடங்களுக்குச் செல்லும் போது மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் திருவொற்றியூர், மணலி, மாதவரம் ஆகிய மண்டலங்களில் கொரோனா பாதிப்பு இல்லை.
தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அம்பத்தூர், அண்ணாநகர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூரில் ஒற்றை இலக்கத்திலேயே பாதிப்பு உள்ளது.
தேனாம்பேட்டை (29) மற்றும் அடையாறு (13) மண்டலங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு இரட்டை இலக்கத்தில் உள்ளது.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மெல்ல குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பானது, ஏப்ரல் 11 முதல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இது அதிகப்படியான பாதிப்பாக இல்லாவிட்டாலும், நாள்தோறும் மெல்ல அதிகரித்து வருவதால் சென்னை மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என்றே கருதப்படுகிறது.
Related Tags :
Next Story