வீரவநல்லூர் நகை கொள்ளை வழக்கு; சட்டக்கல்லூரி மாணவர் கோர்ட்டில் சரண்


வீரவநல்லூர் நகை கொள்ளை வழக்கு; சட்டக்கல்லூரி மாணவர் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 18 April 2022 8:12 PM IST (Updated: 18 April 2022 8:12 PM IST)
t-max-icont-min-icon

வீரவநல்லூர் நகை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த சட்டக்கல்லூரி மாணவர் ஶ்ரீவைகுண்டம் கோர்ட்டில் சரணடைந்தார்.

ஶ்ரீவைகுண்டம்:

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் புதுமனை பகுதியை சேர்ந்த மைதீன் பிச்சை (வயது 60) என்பவர் அந்த பகுதியில் நகை கடை நடத்தி வருகின்றார். கடந்த 16ஆம் தேதி வழக்கம் போல் நகைக்கடையை அடைத்து விட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து வெட்டியது. உடனே அந்த கும்பல் அவரது பையில் இருந்த 5 கிலோ தங்க நகைகளையும் ரூ-75 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் அவரிடமிருந்து பறித்து கொண்டு தப்பி ஓடியது.

இது குறித்து சேரன்மகாதேவி டி.எஸ்.பி தலைமையில் 6 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை செய்து குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேடி வந்தநிலையில், அரிகேசவநல்லூரை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் சுதாகர் (18), மன்னார்கோவில் மருதுபாண்டி (20), அழகுசுந்தரம் (33), அவரது சகோதரர் இசக்கிபாண்டி (30), காக்கநல்லூரை சேர்ந்த அயப்பன் (24), மற்றும் சிறுவர்கள் 2 பேர் என 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வந்த நான்காம் ஆண்டு படித்து வந்த சட்டக் கல்லூரி மாணவர் மந்திரமூர்த்தி (22), என்பவர் இன்று ஶ்ரீவைகுண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

ஶ்ரீவைகுண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தமிழரசு மந்திரமூர்த்தியை 15 நாள் காவலில் வைக்கவும், அதன் பின்னர் சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் ஏப்ரல் 22 ஆம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.


Next Story