தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்தது
தமிழகத்தில் நேற்று 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
சென்னை,
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நேற்று தினசரி பாதிப்பு 30 ஆக பதிவாகியிருந்த நிலையில், இன்று தொற்று பாதிப்பு சற்று குறைந்தது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
இன்று புதிதாக 16 ஆண்கள், 11 பெண்கள் என மொத்தம் 27 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 15 பேர் உள்பட 7 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 31 மாவட்டங்களில் யாரும் புதிதாக பாதிக்கப்பட்டவில்லை.
அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், தென்காசி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட 16 மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகி உள்ளது.
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 13 பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 26 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். தற்போது சிகிச்சையில் 232 பேர் உள்ளனர்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story