குடும்ப வறுமையால் வேலை தேடிச்செல்வதாக கூறி சென்ற பள்ளி மாணவன் மாயம்
வேடசந்தூர் அருகே குடும்ப வறுமையால் வேலை தேச்செல்வதாக சென்று மாயமான பள்ளி மாணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்:
மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகையகோட்டை ஊராட்சி கரையாம்பட்டி நாட்டுக்கல்மேடு பகுதியில் வசித்து வரும் கூலித்தொழிலாளி வீரப்பன் மகன் ஜோதிபிரகாஷ்(வயது 17) ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரது தந்தை வீரப்பன் கோயமுத்தூரில் தனியார் நூற்பாலையில் பணியாற்றி வருகிறார், தாயர் போசம்மாள் கூலிவேலைக்கு சென்று தனது மகன் ஜோதிபிரகாசை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று (17.4.2022) குடும்பம் வறுமை காராணமாக தனது தாயார் போசம்மாளிடம் வேலை தேடிச்செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்ற ஜோதிபிரகாஷ் வீடு திரும்பவில்லை. உறவினர், நண்பர்கள் வீடுளில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து ஜோதிபிரகாசின் தாயார் போசம்மாள் எரியோடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா, சப் இன்ஸ்பெக்டர் ராஜகணேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான பள்ளி மாணவன் ஜோதிபிரகாசை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story