வட்டி தொழில் கற்றுத் தருவதாக கூறி ரூ. 11 1/2 லட்சம் மோசடி..!


வட்டி தொழில் கற்றுத் தருவதாக கூறி ரூ. 11 1/2 லட்சம் மோசடி..!
x
தினத்தந்தி 18 April 2022 9:46 PM IST (Updated: 18 April 2022 9:46 PM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டியில் வட்டி தொழில் கற்றுத் தருவதாக கூறி ஊராட்சி பெண் வார்டு உறுப்பினரிடம் ரூ. 11 1/2 லட்சம் மோசடி செய்த பைனான்ஸ் உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள அழகப்ப சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி மனைவி தைரியலட்சுமி (வயது 31). இவர் அழகப்ப சமுத்திரம் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவரது குடும்பத்தினருக்கும் பண்ருட்டி விழமங்கலத்தைச் சேர்ந்த வட்டித் தொழில் செய்து வரும் பைனான்ஸ் அதிபர் தர்மலிங்கம் மகன் சேகர் (35),என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்தது. 

இந்த நிலையில் சேகர், தைரியலட்சுமியிடம் நான் உனக்கு வட்டி தொழில் கற்றுத் தருகிறேன் உன்னிடம் இருக்கும் பணத்தை தன்னிடம் தரும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் பணம் இல்லாததால் தைரியலட்சுமி தன்னிடம் இருந்த நகைகளை பண்ருட்டியில் உள்ள ஒரு வங்கியில் அடமானம் வைத்து சேகரிடம் ரூபாய் 11 லட்சத்து 50 ஆயிரம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கொடுத்தார். 

ஆனால் சேகர் ஜெயலட்சுமிக்கு தொழிலையும் கற்றுத் தராமல் கொடுத்த பணத்திற்க்கு வட்டியையோ, பணமோ திருப்பித் தரவில்லை. பலமுறை பணத்தை கேட்டும் சேகர் பணத்தை தராமல் கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து தைரியலட்சுமி, சேகர் மீது பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story