குடிபோதையில் ரகளை: சிறுவன் உள்பட 5 பேர் கைது
குடிபோதையில் ரகளை செய்த சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் மதுபானக்கடை அருகில் நேற்று இரவு சிலர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் அறிந்த கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு 3 பேர் குடிபோதையில் நின்றுகொண்டு அந்த வழியாக சென்றவர்களிடம் தகராறு செய்தனர். உடனே அவர்கள் 3 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் புதுப்பேட்டை சேர்ந்த தமிழ்மணி (வயது 18), மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விஜயகுமார் (19) மற்றும் அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் கோரிமேடு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் இந்திராநகர் பகுதியில் ரோந்து மேற்கொண்டபோது, அங்கு வீச்சரிவாளுடன் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட திலாஸ்பேட்டையை சேர்ந்த லட்சுமணன் (20), சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரத்தை சேர்ந்த பூபதி (23) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது கொலை வழக்குகள் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
Related Tags :
Next Story