பாளையங்கோட்டை பஸ் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபர் கைது
பாளையங்கோட்டை பஸ் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை,
நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை பஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த பஸ் நிலையம் வழியாக தற்போது பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பஸ் நிலையத்தில் ஒரு டீக்கடை அருகே உள்ள கீழ் தளத்துக்கு செல்லும் படிக்கட்டு பகுதியில் பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியது.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் வெடித்து சிதறிய நாட்டு வெடிகுண்டு பாகங்கள், வெடி மருந்து பொருட்கள் ஆகியவற்றை சேகரித்தனர்.
வாலிபர் கைது
மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது 2 பேர் வெடிகுண்டை வீசியதும், அதில் சுவர் சேதம் அடைந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து ேபாலீசார் நடத்திய விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் அங்குள்ள ஒரு டீக்கடையில் வேலை செய்து வரும் மணக்கரை பகுதியை சேர்ந்த சுடலை (வயது 26) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை நேற்று கைது செய்தனர். மற்றொருவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சுடலை உள்பட 2 பேர் கோவில் கொடை விழாவின் போது பயன்படுத்தப்பட்ட பட்டாசுகளில் இருந்த வெடி மருந்தை சேகரித்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து, அதை வெடித்து பார்த்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Related Tags :
Next Story