10-ம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு
10-ம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் 10-ம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
மே மாதம் நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு நாளை ஹால் டிக்கெட் வெளியாகிறது. நாளை பிற்பகல் 2 மணி முதல் http://dge.tn.gov.in இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வரும் 27 முதல் 29 வரை நடைபெற உள்ள செய்முறைத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் கட்டாயம் எனவும் மே 2022 பொதுத்தேர்விற்கான கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று அறிந்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story