வாழ்க்கையில் விரக்தி அடைந்ததால் இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை


வாழ்க்கையில் விரக்தி அடைந்ததால் இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 19 April 2022 3:31 PM IST (Updated: 19 April 2022 3:31 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலன் ராணுவத்துக்கு சென்ற நிலையில் கணவனும் விவாகரத்து நோட்டிஸ் அனுப்பியதால் இளம்பெண் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை:

ஆரணி அடுத்த குருகுலம் பகுதியைச் சேர்ந்தவர் மகள் லாவண்யா (வயது 26). இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு செல்வரசு என்பவருடன் திருமணம் நடந்த நிலையில், இவர்களுக்கு தமிழரசு (7 ), இளவரசு (5) என்ற 2 மகன்கள் உள்ளனர் . 

இந்நிலையில் அக்ராபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஐயப்பன் என்பவருடன் லாவண்யாவிற்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு லாவண்யா தன் குழந்தையுடன் கள்ளகாதலனுடன் சென்றுவிட்டார்.

இது சம்பந்தமாக ஆரணி தாலுகா போலீசில் செல்வரசு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் அழைத்து பேசியதில் ராணுவ வீரர் ஐயப்பன் கூட தான் வாழ்வேன் என கூறி எழுதி கொடுத்துவிட்டு இருவரும் சென்னையில் வாழ்ந்து வந்தனர். 

இந்த நிலையில் ராணுவ வீரர் ஐயப்பன் தற்போது ராணுவ பணிக்கு சென்று விட்டதால் லாவண்யா தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். மேலும் செல்வரசு தன் மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

பின்னர் லாவண்யா தன் தாய் வீடான குருகுலம் வீட்டிற்கு வந்து வசித்து வந்துள்ளார். கணவன் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், கள்ளக்காதலனும் தற்போது இராணுவத்தில் சென்றுவிட்டார். 

இதனால் தன் தாய் தந்தைக்கு பாரமாக இருப்பதை விட நாம் இறந்து விடலாம் என எண்ணி வாழ்க்கையில் விரக்தி அடைந்துள்ள லாவண்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது சம்பந்தமாக தாய் தனலட்சுமி ஆரணி தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த லாவண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Next Story