கடைக்கு வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வியாபாரி கைது
புதுவை பஸ் நிலையம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேன்சி கடை வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி
புதுவை பஸ் நிலையம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேன்சி கடை வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
புதுவை சுப்பையா நகரில் ராஜஸ்தானை சேர்ந்த சங்கர்லால் (வயது 42). குடும்பத்துடன் வசித்து வருகிறார். புதிய பஸ் நிலையம் அருகே சொந்தமாக பேன்சி கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இவரது கடைக்கு, 12 வயது மதிக்கத்தக்க சிறுமி விளையாட்டுப் பொருட்கள் வாங்குவதற்கு சென்றார். அப்போது அந்த சிறுமிக்கு சங்கர்லால் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி தனது உறவினரிடம் அந்த சிறுமி தெரிவித்தார். இதுகுறித்து அவர்கள், மாநில குழந்தைகள் நலபாதுகாப்பு குழுவிடம் புகார் அளித்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் சங்கர்லால் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
போக்சோவில் கைது
இதனையடுத்து குழந்தைகள் நலபாதுகாப்பு குழு பரிந்துரைப்படி உருளையன்பேட்டை போலீசார் பேன்சி கடை உரிமையாளர் சங்கர்லாலை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் சங்கர்லால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதிய பஸ் நிலையம் அருகே கடை வைத்திருக்கும் வடமாநில வியாபாரிகள் கடைகளை மூடினர். மேலும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story