மதுக்கடை ஊழியருடன் தகராறு தட்டிக்கேட்ட வாலிபர் தாக்கப்பட்டார் 3 பேருக்கு வலைவீச்சு


மதுக்கடை ஊழியருடன் தகராறு தட்டிக்கேட்ட வாலிபர் தாக்கப்பட்டார் 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 19 April 2022 2:49 PM GMT (Updated: 2022-04-19T20:19:11+05:30)

மதுக்கடை ஊழியருடன் ஏற்பட்ட தகராற தட்டிக்கேட்ட வாலிபர் தாக்கப்பட்டார்.இதுகுறித்து போலீசார் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பாகூர்
கிருமாம்பாக்கம் அடுத்த மூர்த்திக்குப்பம் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் திலீபன் (வயது 23). கன்னியகோவில் புதுநகரை சேர்ந்தவர் பிரபு (24). நண்பர்களான இவர்கள் சம்பவத்தன்று கன்னியக்கோவிலில் உள்ள தனியார் மதுக்கடை பாரில் மது குடித்துள்ளனர். 
அப்போது மணப்பட்டு விக்கி, அஜித், கன்னியகோவில் முருகவேல் ஆகிய 3 பேரும் சேர்ந்து பார் ஊழியரிடம் பில் கட்டுவது தொடர்பாக தகராறு செய்தனர். இதனை திலீபனும், பிரபுவும் தட்டிக்கேட்டனர்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதன்பின் திலீபனும், பிரபுவும் அங்குள்ள கடையில், பானிபூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த முருகவேல், அஜித், விக்கி 3 பேரும் சேர்ந்து திலீபனை இரும்புக் கம்பியாலும், கத்தியாலும் தாக்கினர். பிரபுவும் தாக்கப்பட்டார். 
இதில் காயமடைந்த திலீபன், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகவேல் உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story