திருவண்டார்கோவில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை பணம் திருட்டு


திருவண்டார்கோவில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை  பணம் திருட்டு
x
தினத்தந்தி 19 April 2022 9:20 PM IST (Updated: 19 April 2022 9:20 PM IST)
t-max-icont-min-icon

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு போனது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருபுவனை
திருபுவனை அருகே உள்ள திருவண்டார்கோவில் சுதானா நகரை சேர்ந்தவர் காசிநாதன் மகன் செந்தில்முருகன் (வயது 35). வடமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மேனகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் புதுச்சேரியில் நடைபெறும் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சென்றார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து இரவு 8 மணி அளவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 8 பவுன் நகை, ரூ.7 ஆயிரம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து திருபுவனை போலீஸ் நிலையத்தில் செந்தில்முருகன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story