ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 4 ஆயிரம் கன அடியாக உயர்வு
ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
தருமபுரி,
தமிழகத்தை நோக்கி வரும் காவிரியாறு அமைந்துள்ள வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் நீர் முழுவதும் காவிரியில் சேருகிறது. காவிரியாற்றில் ஏற்கனவே வந்து கொண்டிருக்கும் மிக குறைந்த அளவு நீருடன் இந்த மழை நீரும் சேர்வதால் ஒகேனக்கல் பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று காலை நிலவரத்தின்படி, ஒகேனக்கலில் நீர்வரத்து வினாடிக்கு 4,000 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மெயின் அருவியில் குளித்தும், பரிசலில் உற்சாக பயணம் செய்தும் மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story