போலீஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிளை திருடி, விற்க முயன்ற போலீஸ்காரர் அதிரடி கைது
சென்னை மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிளை திருடி விற்க முயன்ற போலீஸ்காரர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
சென்னை,
கைது செய்யப்பட்ட போலீஸ்காரரின் பெயர் ஜெயச்சந்திரன் (வயது 36). இவர் மெரினா போலீஸ் நிலையத்தில் ரோந்து பிரிவில் போலீஸ்காரராக பணி செய்தார். மயிலாப்பூர் போலீஸ் குடியிருப்பில் வசிக்கிறார். போதை பழக்கம் உள்ளவர். இவரது மனைவி கடந்த பிப்ரவரி மாதம் தீக்குளித்து இறந்துபோனார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஜெயச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் ஜெயச்சந்திரன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் வருமானத்துக்கு கஷ்டப்பட்ட ஜெயச்சந்திரன், மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில், திருட்டு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு, நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடியதாக தெரிகிறது. அந்த மோட்டார் சைக்கிளை தனது நண்பர்கள், நாகராஜ், அருண்பிரகாஷ் ஆகியோர் மூலம், கபிலன் என்பவரிடம் விற்பதற்கு முயற்சி செய்தார். கபிலன் மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை வைத்துள்ளார்.
விற்க முயற்சி
விற்க முயன்ற மோட்டார் சைக்கிளில் மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தின் பெயர் எழுதப்பட்டிருந்தது. இது கபிலனுக்கு சந்தேகத்தை கொடுத்தது. இதுபற்றி ஜெயச்சந்திரனிடம் கேட்ட போது, நான் போலீஸ்காரன், என்மீதே சந்தேகப்படுகிறாயா, என்று கபிலனை அவர் மிரட்டி உள்ளார்.
உடனே இதுகுறித்து, மயிலாப்பூர் போலீசுக்கு கபிலன் தகவல் கொடுத்தார். உடனே போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ஜெயச்சந்திரன் விற்க முயன்ற மோட்டார் சைக்கிள் மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் திருடப்பட்டது, என்பது அம்பலமானது. மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
3 பேர் கைது
போலீஸ்காரர் ஜெயச்சந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் நாகராஜ், அருண்பிரகாஷ் ஆகியோர் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். போலீஸ் நிலையத்திலேயே மோட்டார் சைக்கிளை, போலீஸ்காரர் திருடிய சம்பவம் சென்னை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story