அமெரிக்கா செல்ல இந்த ஆண்டு 8 லட்சம் விசாக்கள் வழங்கப்படும் - அமெரிக்க தூதரகம் அறிவிப்பு
அமெரிக்கா செல்ல இந்த ஆண்டு 8 லட்சம் விசாக்கள் வழங்கப்படும் என்று அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
சென்னை,
அமெரிக்க தூதரக விவகாரங்களுக்கான ஆலோசகர் டொனால்டு ஹெஃப்லின், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், அமெரிக்கா செல்ல இந்த ஆண்டு 8 லட்சம் விசாக்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
கொரோனா ஊரடங்கு காலகட்டத்திற்கு முன்பு 12 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்த அவர், ஐ.டி. கம்பெனிகள் மூலம் அமெரிக்கா செல்ல விரும்புவோருக்கு செப்டம்பர் மாதம் முதல் விசா நேர்காணலுக்கான தேதி ஒதுக்கப்படும் என்று கூறினார்.
மேலும் மாணவர்களுக்கு மே 2-வது வாரத்தில் விசா நேர்காணலுக்கான தேதி ஒதுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது தூதரக சேவைகளுக்கான தலைவர் கேத்தரின் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story