ஸ்ரீபெரும்புதூர் அருகே ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த இளம்பெண் - கொலையா? போலீஸ் விசாரணை


ஸ்ரீபெரும்புதூர் அருகே ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த இளம்பெண் - கொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 20 April 2022 12:36 PM IST (Updated: 20 April 2022 2:09 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண் ஒருவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர்:

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் வடகால் பகுதியில் நேற்று முன் தினம் இரவு சுமார் 25 வயது மதிப்புதக்க இளம் பெண் இறந்த நிலையில் ரத்த காயங்களுடன் கிடந்தார்.

ஸ்ரீபெரும்புதூர் போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

இறந்து கிடந்த இளம்பெண் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த நவீன் என்பரின் மனைவி பிரியா (25 வயது) என்பது தெரிய வந்தது. இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். மேலும் திருவள்ளூர் பகுதியை சேர்ந்த விபச்சார தொழில் செய்யும் ஜோதி என்பருடன் சேர்ந்து விபச்சார தொழிலில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பருடன் பழக்கம் ஏற்பட்டு  காதலாக மாறி இருவரும் பல இடங்களில் கஞ்சா புகைத்து உல்லாசமாக இருந்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில் போலீசாருக்கு அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்து உள்ளது. இது குறித்து விபச்சாரம் புரோக்கர் ஜோதி, கள்ள காதலன் வெங்கடேன் ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஜோதி என்பவர் விபச்சார புரோக்கராக செயல்பட்டு  பிரியா உள்ளிட்ட பல பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்துள்ளதாகவும், தனியார் விடுதி மற்றும் ஓட்டல் ஆகியவற்றில் பெண்களை விபச்சாரத் தொழிலுக்கு அனுப்புவதாகவும் தெரியவந்ததுள்ளது.

பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகே பிரியாவின் சாவின் மர்மம் தெரிய வரும் என தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
1 More update

Next Story