ஆரல்வாய்மொழி அருகே நகை பணம் கொள்ளை - பூட்டிய வீட்டில் மர்ம நபர் கைவரிசை


ஆரல்வாய்மொழி அருகே நகை பணம் கொள்ளை - பூட்டிய வீட்டில் மர்ம நபர் கைவரிசை
x
தினத்தந்தி 20 April 2022 1:05 PM IST (Updated: 20 April 2022 1:05 PM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழியில் குடியிருப்பு பகுதி நிறைந்த இடத்தில் பணம் நகைகளை கொள்ளை போனது குடியிருப்பு வாசிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி வடக்கு பெருமாள்புரம் மாரியம்மன் கோவில் தெருவில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஆறுமுகம் வசித்து வருகிறார். இவரது மகன் சுப்பிரமணியன் மும்பை மெட்ரோ ரயிலில் வேலை செய்து வருகிறார். 

இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த பிப்ரவரி 1ம் தேதி ஆறுமுகம் தனது  குடும்பத்தோடு மும்பை செல்ல வீட்டை பூட்டி சென்றுள்ளார்.

பின்னர் ஊருக்கு திரும்பிய அவர் இன்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது முன்பக்க கேட்டு பூட்டியது போல் இருந்தது. திறந்து உள்ளே சென்றபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு பூசை கதவு உடைக்கப்பட்டு உள்ளே உள்ள அறையில் உள்ள துணிமணி சிதறிக் கிடந்தது. 

மேலும் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூபாய் 23 ஆயிரம், ஒரு ஜோடி கம்மல், 3 மோதிரங்கள் திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து வருகிறார்கள். குடியிருப்பு நிறைந்த பகுதியில் திருட்டு போய் இருப்பது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story