நான் பாஜகவை சேர்ந்தவன் அல்ல, திராவிட தலைவர்களை பார்த்து வளர்ந்தவன் - பாக்யராஜ்


நான் பாஜகவை சேர்ந்தவன் அல்ல, திராவிட தலைவர்களை பார்த்து வளர்ந்தவன் - பாக்யராஜ்
x
தினத்தந்தி 20 April 2022 6:18 PM IST (Updated: 20 April 2022 6:18 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று பேசி இருந்த நிலையில் மன்னிப்பு கோரினார் கே.பாக்யராஜ்.

சென்னை,

சென்னை கமலாலயத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய இயக்குனர் பாக்கியராஜ், இந்தியாவுக்கு மோடி போன்ற எனர்ஜியான பிரதமர் தான் தேவை. பிரதமர் மோடி பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டுள்ளது. அவர் வெளிநாடு செல்வதை சிலர் கிண்டல் செய்கின்றனர். 

ஆனால் இந்த வயதிலும் இத்தனை நாடுகளுக்கு எப்படி பயணிக்கிறார்? உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறார் என்று வியக்கிறேன். தன் மீதான விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி செவி சாய்க்காமல் இருக்கிறார். எனவே, பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்து இருந்தார்.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இயக்குனர் பாக்யராஜ் வெளியிட்ட அறிக்கையில்,

நான் பேசிய வார்த்தை தவறான அர்த்தத்தை உண்டாக்கியது குறித்து அதிர்ச்சி அடைந்தேன். நான் பேசியது யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்.

ஒரு மாதம், இரண்டு மாதம் முன்பே பிறக்கும் குழந்தைகளை குறை பிரசவம் என்பார்கள், ஆனால் குறை இருக்காது. மாற்றுத்திறனாளிகளை நான் அக்கறையுடனேயே பார்க்கிறேன். எப்போது அப்படியே தான் இருப்பேன்.  தமிழகத்தில் பிறந்து, தமிழில் படித்து, தமிழ் சினிமா என்று தான் வளர்ந்து வந்துள்ளேன்.

நான் பாஜகவை சேர்ந்தவன் அல்ல, திராவிட தலைவர்களை பார்த்து வளர்ந்தவன். என்னுடைய சினிமாவிலும் திராவிட இயக்கத்தலைவர்களின் கருத்து இருக்கும். இனியும் அது தொடரும்.  

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story