புதுச்சேரி-கடலூர் சாலையின் நடுவே இரும்பு தடுப்புகள்
விபத்தை தடுக்க புதுச்சேரி-கடலூர் சாலையின் நடுவே இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
விபத்தை தடுக்க புதுச்சேரி-கடலூர் சாலையின் நடுவே இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
குண்டும், குழியுமான சாலை
புதுச்சேரி-கடலூர் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. பல்வேறு இடங்களில் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. கற்கள் பெயர்ந்து சாலையில் பரவி கிடப்பதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் உயிரிழப்புகளும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
எனவே விபத்தை தடுக்க புதுச்சேரி-கடலூர் சாலையை விரிவாக்கம் செய்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து ரூ.17 கோடி செலவில் சாலையை சீரமைத்து தரம் உயர்த்திட முடிவு செய்யப்பட்டது. மேலும் சாலையின் நடுவே தடுப்பு கட்டைகள் அமைப்பதற்காக கூடுதலாக ரூ.3 கோடி மதிப்பீடு செய்யப்பட்டது.
இரும்பு தடுப்புகள்
இதற்கான நிதி கிடைக்காததால் சாலை சீரமைக்கும் பணி தடைப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மோசமான சாலையால் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் உத்தரவின்பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் முக்கிய சந்திப்பு மற்றும் விபத்து அதிகம் நடைபெறும் இடங்களில் இரும்பு தடுப்புகளை (பேரிகார்டு) வைத்துள்ளனர்.
இருப்பினும் நிரந்தர தீர்வாக புதுச்சேரி-கடலூர் சாலையை விரைவில் சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
Related Tags :
Next Story