ரெயிலில் போதைப்பொருட்கள் கடத்திய 4 பேர் கைது


ரெயிலில் போதைப்பொருட்கள் கடத்திய 4 பேர் கைது
x
தினத்தந்தி 20 April 2022 4:46 PM GMT (Updated: 2022-04-20T22:16:37+05:30)

ஒடிசாவில் இருந்து புதுச்சேரிக்கு ரெயிலில் போதைப்பொருட்கள் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஒடிசாவில் இருந்து புதுச்சேரிக்கு ரெயிலில் போதைப்பொருட்கள் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சோதனை
புதுவைக்கு வடமாநிலத்தில் இருந்து வரும் ரெயில் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஐ.ஜி. சந்திரன் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு வம்சிதர ரெட்டி, சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ரமேஷ், ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் இன்று மதியம் புதுச்சேரி ரெயில் நிலையத்தில் திடீரென சோதனை நடத்தினர்.
4 பேர் கைது
அப்போது  ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து புதுச்சேரி வந்த ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில் வடமாநில வாலிபர்கள் 5 பேர் தடை செய்யப்பட்ட 50 கிலோ போதைப்பொருட்கள் மற்றும் 400 கிராம் கஞ்சாவை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ஒடிசாவை சேர்ந்த ஜனாசாஹீ (வயது 26), பனாராஜங் சங்கிலாலா (27), சர்ஜுஷாசாஹீ (36). சர்ஜீஸ்நாயக் (26) ஆகிய 4 பேரை  போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா இல்லாத மாநிலம்
இதுகுறித்து போலீஸ் ஐ.ஜி. சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘புதுவையில் கஞ்சா பயன்படுத்துவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வடமாநிலங்களில் இருந்து வரும் ரெயில்கள் மூலம் தான் அதிகளவில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தி வருவது தெரிகிறது. அதன்படி இந்த ரெயிலில் தற்போது சோதனை நடத்தப்பட்டு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புதுவையில் தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்கள் கண்காணிக்கப்படுவார்கள். புதுச்சேரி கஞ்சா இல்லாத மாநிலமாக மாற்றப்படும்’ என்றார்.

Next Story