அமித்ஷா வருகை குறித்து பா.ஜ.க.வினர் ஆலோசனை


அமித்ஷா வருகை குறித்து பா.ஜ.க.வினர் ஆலோசனை
x
தினத்தந்தி 20 April 2022 10:49 PM IST (Updated: 20 April 2022 10:49 PM IST)
t-max-icont-min-icon

அமித்ஷா வருகிற 24-ந்தேதி புதுச்சேரி வருவதையொட்டி பா.ஜ.க.வினர் ஆலோசனை நடத்தினர்.

அமித்ஷா வருகிற 24-ந்தேதி புதுச்சேரி வருவதையொட்டி பா.ஜ.க.வினர் ஆலோசனை நடத்தினர்.
அமித்ஷா வருகை
அரசு முறை பயணமாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 24-ந் தேதி புதுச்சேரி வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் வரும் அவருக்கு புதுவை விமான நிலையத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் வரவேற்பு அளிக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து அவர் புதுவை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மகான் அரவிந்தரின் 150-வது ஆண்டு விழா, கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார். தொடர்ந்து கம்பன் கலையரங்கத்தில் நடைபெறும் விழாவில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு 
விழா முடிந்ததும் பா.ஜ.க. அலுவலகத்துக்கு சென்று அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பு முடிந்ததும் புதுவை விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானத்தில் டெல்லி செல்கிறார். இதற்கிடையே அவர் அரவிந்தர் ஆசிரமம், பாரதியார் நினைவு இல்லத்துக்கும் சென்று பார்வையிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுவை அரசு தீவிரமாக செய்து வருகிறது. இந்தநிலையில் புதுவை வரும் அமித்ஷாவுக்கு வரவேற்பு அளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் பா.ஜ.க. அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார்.
வரவேற்பு ஏற்பாடுகள்
கூட்டத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிகழ்ச்சிகள் தொடர்பாக விளக்கி பேசினார். அமித்ஷாவின் வருகையையொட்டி செய்யவேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் அவர் விவரித்தார். கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், வெங்கடேசன், அசோக்பாபு, வி.பி.ராமலிங்கம், பொதுச்செயலாளர் மோகன்குமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story