பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து ரகளை கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது


பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து ரகளை கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 21 April 2022 3:07 AM IST (Updated: 21 April 2022 3:07 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் தோளில் கைவைத்து செக்ஸ் தொல்லை கொடுத்து ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னை மயிலாப்பூர் துணை கமிஷனர் அலுவலகத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் கவுசிகா (வயது 27). இவர் நேற்று முன்தினம் இரவு சீருடை அணியாமல், சாதாரணமாக பேன்ட், சட்டை அணிந்து தனது மோட்டார்சைக்கிளில் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலைக்கு வந்துள்ளார். அங்குள்ள டீக்கடை ஒன்றில் டீ சாப்பிட்டுள்ளார்.

அப்போது அங்கு குடிபோதையில் 3 இளைஞர்கள் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் கவுசிகாவை கிண்டலடித்து ரகளை செய்தனர்.

‘இந்த பையனை எங்கோ பார்த்துள்ளோம்... நீ யாரப்பா?’ என்று கேட்டு தோளிலும் கைபோட்டு தொல்லை கொடுத்துள்ளனர். கவுசிகா, நான் மயிலாப்பூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கிறேன் என்று பதில் கூறி இருக்கிறார். இருந்தாலும் அவர்களின் தொல்லை தொடர்ந்தது. அதையடுத்து கவுசிகா அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் நுங்கம்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

3 பேர் கைது

உடனடியாக இன்ஸ்பெக்டர் சேட்டு தலைமையில் போலீஸ் படையினர் விரைந்து சென்றனர். ரகளையில் ஈடுபட்ட 3 பேரையும் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினார்கள். போதையில் இருந்த அவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அவர்களது பெயர் செல்வக்குமார் (வயது 23), விக்னேஷ் (22), நரேஷ் (20) ஆகும். நரேஷ், செல்வகுமார் இருவரும் தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர்கள். நரேஷ் கல்லூரி மாணவர். செல்வக்குமார் மீது தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறிய வழக்கு உள்ளது. விக்னேஷ் மந்தைவெளியில் வசிக்கிறார். அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

Next Story