குடியிருப்புகளுக்கு கட்டண சலுகை அறிவிப்பு - அமைச்சர் முத்துசாமி


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 21 April 2022 6:48 AM IST (Updated: 21 April 2022 6:48 AM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கான வாங்கும் திறனுக்கு ஏற்ற குடியிருப்புகளுக்கு கட்டண சலுகை வழங்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கான வாங்கும் திறனுக்கு ஏற்ற குடியிருப்புகளுக்கு கட்டண சலுகை வழங்கப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார். 

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் முத்துசாமி வெளியிட்டார். அதில் 60 இடங்களில் உள்ள பழுதடைந்த 10 ஆயிரம் தமிழ்நாடு அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகள் மறு கட்டுமானம் செய்யப்படும் என்று தெரிவித்தார். 

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் நீண்ட நாட்களுக்கு முன்பு கட்டி விற்பனை செய்யப்பட்ட குடியிருப்பு வளாகங்களை மறுகட்டுமானம் செய்ய வாரியம் துணைபுரியும் என்றும் அவர் தெரிவித்தார். நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கான வாங்கும் திறனுக்கு ஏற்ற குடியிருப்புகளுக்கு கட்டண சலுகை வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

 செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் புதிய பேருந்து முனையங்கள் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் கட்டப்படும் என்றும் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் நெரிசலை குறைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

Next Story