இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் மர்மநபரால் பரபரப்பு..!


இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் மர்மநபரால் பரபரப்பு..!
x
தினத்தந்தி 21 April 2022 11:45 AM IST (Updated: 21 April 2022 11:29 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் மர்மநபரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் ரயில் நிலையம் அருகே உள்ள மீனாட்சி நகர் ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த கண்ணன்(32) பில்டிங் காண்ட்ராக்டர்.  இவர் நேற்று இரவு பணிகளை முடித்து விட்டு நள்ளிரவில்  வீட்டிற்கு வந்து தனது இரு சக்கர வாகனத்தை வீட்டிற்கு வெளியே நிறுத்திவிட்டு வீட்டில் படுத்துறங்கி உள்ளார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தின் மீது அமர்ந்து இருப்பதை வீட்டிற்குள் இருந்த எல்.இ.டி யில் தெரிந்ததை அடுத்து கண்ணனின் தந்தை தங்கராஜ் மகன்களை எழுப்பியுள்ளார்.

இதையடுத்து வெளியே வந்து பார்த்தபோது மர்மநபர் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பி செல்லும் போது துரத்தி உள்ளனர்.  மர்ம நபர் இருசக்கர வாகனத்தை வேகமாக எடுத்துச் சென்றதால் பிடிக்க முடியாமல் திணறி உள்ளனர்.

இதையடுத்து சிசிடிவியில் பதிவான காட்சிகளை கொண்டு கடம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் இவரது லாரியில் ஏற்கனவே பேட்டரி திருடு போயுள்ளது. அதே பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனம் திருடு போய் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story