தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு...!
தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் மட்டும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கொரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வருகிறது. ஆனாலும், ஒவ்வொரு நாளும், தினசரி கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று 31 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,53,390 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 256 ஆக உள்ளது. 26 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர். இதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,15,109 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. இதுவரை மொத்தம் 38,025 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story