திருவாரூர்: மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு...!


திருவாரூர்: மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு...!
x
தினத்தந்தி 21 April 2022 3:22 PM GMT (Updated: 21 April 2022 3:22 PM GMT)

திருவாரூரில் மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த கண்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று மாணவ மாணவிகள் வழக்கம் போல் மதிய உணவு சாப்பிட்டு உள்ளனர் . சுமார் 3 மணி அளவில் ஏழு குழந்தைகள் திடீரென வகுப்பறையில் வாந்தி எடுத்ததுடன் மயக்கம் அடைந்தத விழுந்துள்ளனர். 

இதையடுத்து அக்கம்பக்கத்து மற்றும் ஆசிரியர்கள் தகவலறிந்த கண்டியூர் ஊராட்சி மன்ற தலைவர் ராபர்ட் இராமசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பள்ளி மாணவ மாணவிகளை அவசரம் அவசரமாக ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர் . 

தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனை மற்றும் மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ராமசுப்பிர மணியன் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தட்சிணா மூர்த்தி ஆகியோர் வாகனங்களில் கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . 

மேலும் இதுகுறித்து தகவலறிந்த திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பள்ளி மாணவ மாணவிகளின் நலன் குறித்து விசாரித்ததுடன் சம்பவம் குறித்தும் விசாரணை செய்தார். 

மேலும் மருத்துவமனை மருத்துவர்களிடம் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் மேற்கொள்ள கேட்டுக்கொண்டார் . அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story