ஆற்றங்கரையோரத்தில் கற்களால் தடுப்பு அமைக்க வேண்டும்


ஆற்றங்கரையோரத்தில் கற்களால் தடுப்பு அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 21 April 2022 10:17 PM IST (Updated: 21 April 2022 10:17 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளநீர் ஊருக்குள் புகுவதை தடுக்க ஆற்றங்கரையோரத்தில் கருங்கற்களால் தடுப்பு அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளநீர் ஊருக்குள் புகுவதை தடுக்க ஆற்றங்கரையோரத்தில் கருங்கற்களால் தடுப்பு அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளப்பெருக்கு

தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளைம் அருகே என்.ஆர்.நகர் உள்ளது. அரசு சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்ட இந்த குடியிருப்பில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றின் கரையோரத்தில் இந்த நகர் அமைந்துள்ளது.
தொடர் மழை பெய்யும் போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்து விடுகிறது. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் குடியிருப்புகளில் புகுந்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

கருங்கற்களால் தடுப்பு

கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் ஆற்றுநீர் குடியிருப்பை சூழ்ந்தது. தண்ணீரில் தத்தளித்த மக்களை பேரிடர் மீட்பு குழுவினர் ரப்பர் படகு மூலம் மீட்டு தனியார் பள்ளியில் தங்க வைத்தனர்.
எனவே வெள்ளநீர் குடியிருப்புக்குள் புகுவதை தடுக்க சுண்ணாம்பாற்றின் கரையோரத்தில் தடுப்பு அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அப்பகுதியில் தற்காலிகமாக மண்ணால் தடுப்பு அமைக்கப்பட்டது.
ஆனால் 6 மாதங்கள் ஆகியும் நிரந்தமாக தடுப்பு அமைப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்களின் நலன்கருதி கற்களால் தடுப்பு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story