ரூ.66½ லட்சத்தில் சாலை சீரமைக்கும் பணி
கதிர்காமம் தொகுதியில் ரூ.66½ லட்சம் வாலை சீரமைக்கும் பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி கதிர்காமம் தொகுதிக்குட்பட்ட தந்தை பெரியார் நகர் பிரதான சாலை மழையால் சேதமடைந்தது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்ததன்பேரில் ரூ.66.50 லட்சம் செலவில் சாலை சீரமைக்கப்படுகிறது.
இந்த பணியை இ்ன்று முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறாடா ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ. பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் ஏழுமலை, உதவிப்பொறியாளர் துளசிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story