“பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது உடனடி நடவடிக்கை” - அமைச்சர் கீதா ஜீவன் உறுதி
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, பதிலுரை வழங்கிய அமைச்சர் கீதா ஜீவன், திமுக ஆட்சியில் பெண்கள் முன்னேற்றத்திற்கான ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். சென்னையில் சிறார்களுக்கான பிரத்யேக போதை தடுப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மூத்த குடிமக்களுக்கான வரைவு கொள்கை-2022 விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கல்விச்சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story