கலங்கரை விளக்கம் சுரங்க மெட்ரோ ரெயில் நிலையத்திற்காக மண் ஆய்வு
மெரினா கடற்கரையில் காந்தி சிலை மற்றும் கலங்கரை விளக்கம் அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டு கலங்கரை விளக்கம் சுரங்க மெட்ரோ ரெயில் நிலையம் அமைப்பதற்காக எந்திரங்கள் மூலம் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.
சென்னை,
சென்னையில் 2-வது கட்டமாக 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கான மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நடந்து வருகிறது. இதில் 4-வது வழித்தடமான கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 26.1 கிலோ மீட்டர் தூரத்தை உள்ளடக்கிய பாதையில் சுரங்கப்பாதை மற்றும் உயர்மட்ட பாதைக்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. வருகிற 2025-ம் ஆண்டு பணிகளை நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இன்னும் 4 ஆண்டுகளில் பணிகள் நிறைவடைந்த உடன், மெரினா கடற்கரைக்கு போரூர் அல்லது பூந்தமல்லி போன்ற புறநகர் பகுதிகளிலிருந்து மெரினா கடற்கரைக்கு ஒரே ரெயிலில் பயணிக்க முடியும். இதற்காக கலங்கரைவிளக்கம் அருகில் கலங்கரை விளக்கம் ரெயில் நிலையம் மற்றும் சுரங்க ரெயில் பாதை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, கடற்கரையை இணைக்கும் சுரங்க மெட்ரோ ரெயில் பணிகளுக்கான மண் ஆய்வு நடைபெறும் காமராஜர் சாலையின் சில பகுதிகளில் மெட்ரோ ரெயில் நிறுவனம் தடுப்பு வேலிகளை அமைத்துள்ளது.
மண் பரிசோதனை
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
மெரினா கடற்கரையில் காந்தி சிலை மற்றும் கலங்கரை விளக்கம் அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டு மண் மாதிரிகள் சேகரிக்கும் எந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. கட்டுமான ஒப்பந்தம் வழங்கப்படுவதற்கு முன்பு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மண் ஆய்வுகளை மேற்கொண்டாலும், முந்தைய சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் விசாரணை அறிக்கையை சரிபார்க்க ஒப்பந்தக்காரர்கள் தங்கள் சொந்த மண் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். மண் பரிசோதனைகள், சுரங்கத்தில் கட்டுமானத்தின்போது பின்பற்ற வேண்டிய எந்திரங்கள் மற்றும் முறையைத் திட்டமிட உதவும்.
5 ரெயில் நிலையங்கள்
கலங்கரை விளக்கம் முதல் பாரதிதாசன் ரோடு ஸ்டேஷன் வரையிலான 5.15 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஐ.டி.டி. சிமென்டேஷன் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கடற்கரை பகுதி உள்ளது. இந்த பாதையில் 5 ரெயில் நிலையங்கள் வர உள்ளன. அதில் 4 ரெயில் நிலையங்கள்- கலங்கரை விளக்கம், கச்சேரி சாலை, ஆழ்வார்பேட்டை மற்றும் பாரதிதாசன் சாலை ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கட்டப்படுகிறது. மயிலாப்பூர் மெட்ரோ ரெயில் நிலையம், 3 மற்றும் 4-வது வழித்தடங்களை இணைக்கும் ஒரு சந்திப்பு ரெயில் நிலையமாகும்.
வருகிற 2025-ம் ஆண்டிற்குள் போரூர் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தை பயணிகள் பயன்பாட்டுக்கு திறக்கும் நோக்கில் பணிகள் நடந்து வருகிறது. ஒரு சில மாத இடைவெளியில், மீதமுள்ள 3 மற்றும் 5-வது வழித்தடங்களையும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெரினாவுக்கு நேரடி ரெயில்
போரூர், பூந்தமல்லி போன்ற புறநகர் பகுதிகளிலிருந்தும், மயிலாப்பூர், நந்தனம், தியாகராயநகர், கோடம்பாக்கம் மற்றும் வடபழனி போன்ற முக்கியப் பகுதிகளை சேர்ந்தவர்கள் மெரினா கடற்கரைக்கு நேரடி ரெயிலில் செல்ல முடியும்.
மாதவரம் போன்ற வடக்கு புறநகர் பகுதிகள், ஆலந்தூர் அல்லது சோழிங்கநல்லூர் போன்ற தெற்கு புறநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலங்கரைவிளக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்குச் செல்ல போரூர் சந்திப்பு அல்லது மயிலாப்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து ரெயில்களில் மாறி செல்ல வேண்டும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Related Tags :
Next Story