திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி தடுப்பணையில் மூழ்கி பலி


திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி தடுப்பணையில் மூழ்கி பலி
x
தினத்தந்தி 21 April 2022 8:07 PM GMT (Updated: 2022-04-22T01:37:03+05:30)

திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி தடுப்பணையில் மூழ்கி பலியாயினர். நீச்சல் தெரியாததால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் உரிகம் பகுதியை சேர்ந்த சிவமாதன் மகன் சிவா (வயது 21). தேன்கனிக்கோட்டையை சேர்ந்த சின்னராஜ் மகள் அபிநயா (18).

இவர்கள் 2 பேருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. உரிகம் பகுதியில் நடந்த திருவிழாவிற்காக அபிநயா சென்றிருந்தார். அங்கு வன அலுவலகம் பின்புறம் உள்ள தடுப்பணையில் அபிநயா குளிக்க சென்றார்.

தண்ணீரில் மூழ்கி பலி

அப்போது நீச்சல் தெரியாததால் அபிநயா தண்ணீரில் மூழ்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு சற்று தொலைவில் இருந்த சிவா ஓடி வந்து காப்பாற்றுவதற்காக தடுப்பணைக்குள் இறங்கினார். அபிநயாவை காப்பற்ற முயன்ற சிவாவும் தண்ணீரில் மூழ்கினார்.

நீச்சல் தெரியாததால் இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

Next Story