சென்னை விமான நிலையத்தில் முககவசம் கட்டாயம்
நீண்ட நாட்களுக்கு பிறகு 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால், சென்னை விமான நிலையம் வரும் பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
ஆலந்தூர்,
கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டதால் தமிழக அரசு கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை தளர்த்தி உள்ளது. 2 ஆண்டுகளாக கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு கடந்த ஒரு மாதமாக தளர்த்தப்பட்டது. முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படாது எனவும் அரசு அறிவித்தது.
இதையடுத்து, தமிழகம் முழுவதிலும் முக கவசம் அணிபவா்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.
4 பேருக்கு கொரோனா
இந்நிலையில், வேகமாக குறைந்து வந்த கொரோனா தொற்று, தற்போது, பல்வேறு நாடுகளில் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாகி வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு, சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில், கடந்த காலத்தைபோல், கண்டிப்பாக அல்லாமல் அன்போடு அனைவரும் முக கசவம் அணிந்து வரவேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்துகின்றனா்.
அதன்படி, விமான பயணிகள் போர்டிங் பாஸ் வாங்கும் கவுண்ட்டரில் முக கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே, போர்டிங் பாஸ் கொடுக்கின்றனர். அணியாதவர்களை ஏன் அணியவில்லை? என்று கேட்டு முக கவசம் அணியும்படி வற்புறுத்துகின்றனர்.
முன்னெச்சரிக்கை
இதேபோல், சென்னை விமான நிலையத்தில் போா்டிங் பாஸ் வாங்கும் இடம் என்றில்லாமல், அனைத்து பிரிவுகளிலும் பயணிகளை கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரும்படி அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். பயணிகள் மட்டுமல்லாது பார்வையாளர்கள், விமான நிலைய ஊழியர்கள், பாதுகாவலர்கள் மற்றும் விமான நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுபவா்கள் உள்பட அனைத்து பிரிவினரையும், முக கவசம் அணியும்படி வலியுறுத்துகின்றனர்.
சென்னை விமான நிலையம் வரும் பயணிகள், முக கவசம் அணிவதை இந்த அளவு கட்டாயப்படுத்துவதற்கு என்ன காரணம்? என்று அதிகாரிகளிடம் விசாரித்தபோது, “கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதேபோன்ற ஒரு நிலை மீண்டும் ஏற்படக்கூடாது என்பதற்காக தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்தந்த விமான நிறுவனங்கள் பயணிகள் மற்றும் ஊழியர்கள், பாதுகாவலர்கள் அனைவரையும் முககவசம் அணியும்படி வற்புறுத்துகின்றனர். முக கவசம் அணியும் முறை மேலும் 2 மாதம் நீடிக்கும்” என்றனர்.

Related Tags :
Next Story