மது போதையில் மயங்கிய தாய்; கதறி அழுத 2 வயது குழந்தை..!


மது போதையில் மயங்கிய தாய்; கதறி அழுத 2 வயது குழந்தை..!
x
தினத்தந்தி 22 April 2022 6:52 AM IST (Updated: 22 April 2022 6:52 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் மது போதையில் தாய் மயங்கி கிடந்ததால் அவரின் 2 வயது குழந்தை கதறி அழுத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி:

புதுச்சேரி, பாரதிதாசன் வீதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடிபோதையில் மயங்கி கிடந்தார். அந்த பெண்ணின் 2 வயது குழந்தை செய்வதறியாது தாயின் அருகில் அமர்ந்துகொண்டு கதறி அழுதது. 

இதை பார்த்த பொதுமக்கள் குழந்தைகள் நலக்குழுவுக்கு தகவல் கொடுத்தனர். உடனே குழந்தைகள் நலக்குழு தலைவர் சிவசாமி தலைமையில் உறுப்பினர்கள் முருகையன், சித்ரா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  அழுது  துடித்த குழந்தையை மீட்டு உணவு கொடுத்தனர். 

மேலும் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்தனர். போதையில் இருந்த பெண்ணை மீட்டு  குடிப்பழக்கத்தில் இருந்து திருந்த அறிவுரை கூறினர்.

Next Story