திருமணம் செய்வதாக கூறி கர்ப்பமாக்கிய வாலிபர் வீட்டின் முன்பு இளம்பெண் தர்ணா..!


திருமணம் செய்வதாக கூறி கர்ப்பமாக்கிய வாலிபர் வீட்டின் முன்பு இளம்பெண் தர்ணா..!
x
தினத்தந்தி 22 April 2022 10:06 AM IST (Updated: 22 April 2022 10:06 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் அருகே வாலிபருடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக கர்ப்பமடைந்ததாக கூறி இளம்பெண் தர்ணா இருந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்:

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 50). இவரது மனைவி மாரியம்மாள் (46). இவர்கள் தங்களது 2-வது மகள் ஐஸ்வர்யாவுடன் திருப்பூர் வாவிபாளையம் குருவாயூரப்பன் நகரில் வசித்து வருகின்றனர். 

ஐஸ்வர்யாவிற்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உறவினரான தங்கபாண்டி என்பவருடன் திருமணம் நடந்தது. அதன்பின்னர் ஐஸ்வர்யா அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வந்தார். அப்போது பனியன் நிறுவன உரிமையாளர் மகனுக்கும், ஐஸ்வர்யாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. 

இதனை அறிந்த ஐஸ்வர்யாவின் கணவர் ஐஸ்வர்யாவிடம் சண்டையிட்டு பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் பனியன் நிறுவன உரிமையாளர் மகனுடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதாக கூறி தன்னை திருமணம் செய்து கொள்ளச்சொல்லி பனியன் நிறுவன உரிமையாளர் மகனை வற்புறுத்தியுள்ளார்.

அதற்கு அவர் காலம் கடத்தி வந்துள்ளார். மேலும் ஐஸ்வர்யாவை கர்ப்பத்தை கலைத்துவிடுமாறும் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யா பனியன் நிறுவன உரிமையாளர் மகன் வீட்டின் முன் அமர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும் வரை இந்த இடத்தை விட்டு செல்லமாட்டேன் எனக்கூறி தர்ணாவில் ஈடுபட்டார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஊத்துக்குளி போலீசார் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரனை மேற்கொண்டனர்.


Next Story