கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சசிகலாவிடம் 2-வது நாளாக விசாரணை தொடங்கியது
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தொடர்ந்து 2-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை,
கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் 5½ மணி நேரம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்தநிலையில் இன்றும் 2-வது நாளாக விசாரணை தொடருகிறது. மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் உட்பட 8 பேர் கொண்ட குழுவினர் சசிகலாவிடம் 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொடநாடு எஸ்டேட் தொடர்பான ஆவணங்கள், முக்கிய கேள்விகளுக்கு சசிகலா விளக்கமளிக்கிறார்.
சினிமாவை மிஞ்சும் மர்மங்கள் நிறைந்த பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த வழக்கு இறுதிக்கட்ட விசாரணையை நெருங்கி உள்ளதால் சசிகலாவிடம் தொடர்ந்து 2-வது நாளாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story