சாத்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 3 வயது குழந்தை பலி..!
சாத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்ததில் 3 வயது பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே பலி மேலும் 3 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாத்தூர்:
கன்னியாகுமரி மாவட்டம், ஆமணக்கு விளை பகுதியைச் சேர்ந்த சுயம்பு தாசன் என்பவர் மகன்கள் லிங்கேஸ் (வயது 36), சதீஷ் (34) ஆகிய இருவரும் சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் தங்களது குடும்பத்தினருடன் சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊரான ஆமணக்கு விளைக்கு குழந்தைக்கு முடி காணிக்கை செய்வதற்கு தங்களது காரில் சென்றுள்ளனர். சதீஷ் என்பவர் கார் ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது விருதுநகர் மாவட்டம், சாத்தூர், பெத்துரெட்டிபட்டி விலக்கு அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் லிங்கேஷ் என்பவரது 3 வயது குழந்தை லியா ஆதிரா தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
மேலும் லிங்கேஸ் மற்றும் சதீஷ் இருவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் என 6 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story