சசிகலாவிடம் 2 வது நாள் விசாரணை ...! நடந்தது என்ன? -முழு விவரம்
சிறையில் இருந்தபோது கோடநாடு எஸ்டேட்டில் உள்ள பங்களாவின் கண்காணிப்புப் பணியை யாரிடம் கொடுத்தீர்கள்? என சசிகலாவிடம் போலீசார் கேள்வி எழுப்பினர்.
சென்னை,
கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் நேற்று 5½ மணி நேரம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்தநிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் விசாரணையை நிறைவு செய்தது தனிப்படை போலீஸ். மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை துருவி துருவி கேள்வி கேட்டு வாக்குமூலம் பெற்றது.
நேற்று 5½ மமணி நேரம் விசாரணை நடந்த நிலையில் இன்று 4 மணி நேரம் தனிப்படை விசாரித்துள்ளது. வழக்கு தொடர்பாக சென்னை தி.நகர் வீட்டில் 2-வது நாளாக சசிகலாவிடம் 10 மணி நேரம் விசாரணை நடந்தது.
போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தலைமையில் நீலகிரி எஸ்.பி ஆசிஸ்ராவத், ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பி சந்திரசேகரன், பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் என8 பேர் கொண்ட தனிப்படை போலீசார் இன்று காலை 10 மணிக்கு சென்னை தியாகராயநகரில் உள்ள சசிகலா வீட்டுக்குச் சென்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர்.
அப்போது, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பின்னர், கோடநாடு எஸ்டேட்டில் உள்ள பங்களாவின் கண்காணிப்புப் பணியை யாரிடம் கொடுத்தீர்கள்?
எஸ்டேட்டின் சிசிடிவி கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்த தினேஷ்குமார் தற்கொலை செய்வதற்கு முன்னர் உங்களிடமோ, உங்களது உறவினரிடமோ பேசினாரா?
சிசிடிவி காட்சிகளை எத்தனை நாட்களாக தினேஷ்குமார் ஆய்வு செய்து வந்தார்?
கோடநாடு பங்களாவில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், சிசிடிவி கேமராக்கள் செயல்படாதது குறித்து முன்கூட்டியே தெரியுமா?
கொலை, கொள்ளைச் சம்பவம் குறித்து எஸ்டேட் மேலாளர் நடராஜன் முதலில் யாரிடம் தகவல் தெரிவத்தார்?
எப்போதும் மின்தடை ஏற்படாத பகுதியான கோடநாடு எஸ்டேட் பகுதியில் கொலை, கொள்ளைச் சம்பவம் நடந்தபோது ஏற்பட்ட மின்தடை குறித்து யாரிடமாவது கேட்டீர்களா?
என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் சசிகலாவிடம் கேட்கப்பட்டன.
இதுதொடர்பாக சசிகலா அளித்த வாக்குமூலங்களைப் போலீசார் வீடியோ பதிவு செய்தனர்.
சசிகலாவிடம் விசாரணை... நடந்தது என்ன? என்பது அவரது வழக்கறிஞர் விளக்கம் ராஜ செந்தூர்பாண்டியன் கூறியதாவது:-
சசிகலாவிடம் விசாரணை முறையாக நடைபெற்றது. சசிகலாவிடம் நடத்திய விசாரணையில் காவல்துறையினருக்கு முழு திருப்தி ஏற்பட்டு உள்ளது. கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் எந்தவித தயக்கமும் இன்றி, சசிகலா பதிலளித்துள்ளார்.
கொடநாடு பங்களாவை புதுப்பிக்கவும், அங்கு செல்லவும் சசிகலாவுக்கு தடை இல்லை என்று வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story