கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் - சசிகலா


கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் - சசிகலா
x
தினத்தந்தி 22 April 2022 6:11 PM IST (Updated: 22 April 2022 6:11 PM IST)
t-max-icont-min-icon

காவல்துறை கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளேன் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

சென்னை,

கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம்  தனிப்படை போலீசார்,  2 நாட்களாக விசாரணை நடத்திய நிலையில், சசிகலா தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது;-

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.  காவல்துறை கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளேன். காவலாளி மற்றும் அவரது குடும்பத்தினரின் உயிரிழப்பிற்கு உரிய நீதி கிடைத்திட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story