4 ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை
சட்டம்- ஒழுங்கு பாதிக்கும் அபாயம் உள்ளதால் 4 ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கக்கோரி போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
சட்டம்- ஒழுங்கு பாதிக்கும் அபாயம் உள்ளதால் 4 ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கக்கோரி போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
கொலை வழக்கு
புதுச்சேரி லாஸ்பேட்டை செல்லபெருமாள்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வினோத் என்கிற மன்னா வினோத் (வயது 27). கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரத் என்கிற பொடிமாஸ் (28). இவர்கள் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போது இவர்கள் 2 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இவர்களால் அந்த பகுதியில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
எனவே இவர்கள் ஊருக்குள் நுழைய தடைவிதிக்க வேண்டும் என்று லாஸ்பேட்டை போலீசார், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
ஊருக்குள் நுழைய தடை
முத்தியால்பேட்டை விசுவநாதன் நகர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி டிராக் சிவா (32), சின்னையபுரத்தை சேர்ந்த பிரபு நாராயணன் (37) ஆகிய 2 பேர் மீது வெடிகுண்டு, கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
இவர்கள் 2 பேரும் ஊருக்குள் இருந்தால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என கருதினர். எனவே இவர்கள் 2 பேரையும் ஊருக்குள் நுழைய தடைவிதிக்க வேண்டும் என்று முத்தியால்பேட்டை போலீசார் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
Related Tags :
Next Story