புதுச்சேரியில் சட்ட பல்கலைக்கழகம் தொடங்கப்படும்
புதுச்சேரியில் சட்ட பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
புதுச்சேரியில் சட்ட பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
மாதிரி நீதிமன்ற போட்டி
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரியில் 39-வது தேசிய அளவிலான மாதிரி நீதிமன்ற போட்டி நேற்று தொடங்கியது. விழாவில் கல்லூரியின் முதல்வர் சீனிவாசன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறுகையில், புதுவை சட்ட கல்லூரி ஒரு சிறந்த கல்லூரியாக தொடரும். மேலும் சட்ட பல்கலைக்கழகம் தனியாக தொடங்கப்படும். என்றார்.
நாடு முழுவதும்...
விழாவில் புதுச்சேரி மாவட்ட தலைமை நீதிபதி செல்வநாதன், காலாப்பட்டு எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.
சட்டக்கல்லூரி மாதிரி நீதிமன்றம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ) வரை நடக்கிறது. போட்டியில் நாடு முழுவதும் இருந்து 35 சட்ட கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
கண்டனம்
முன்னதாக பாண்டிச்சேரி வக்கீல்கள் சங்க அவசர செயற்குழு கூட்டம் சங்க வளாகத்தில் தலைவர் குமரன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் புதுவை அரசு சட்டக் கல்லூரியில் நடைபெறும் மாதிரி நீதிமன்ற போட்டி தொடக்க விழாவில் பாண்டிச்சேரி வக்கீல்கள் சங்கத்திற்கு உரிய முக்கியத்துவம் அளிக்காத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story