திருடர்களை விரட்டிச்சென்ற சமையல்காரர் அடித்துக்கொலை


திருடர்களை விரட்டிச்சென்ற சமையல்காரர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 23 April 2022 1:38 AM IST (Updated: 23 April 2022 1:38 AM IST)
t-max-icont-min-icon

திருடர்களை விரட்டிச்சென்ற சமையல்காரர் அடித்துக்கொலை செய்யப்பட்டாா்.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் திருமால் (வயது 54), சமையல் மாஸ்டர். இவரின் வீட்டுக்கு அருகே நகராட்சிக்கு சொந்தமான மோட்டாருடன் பொருத்தப்பட்ட சிறுமின்விசை தொட்டி இருக்கும் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை நீண்ட நேரமாகச் சத்தம் கேட்டது. அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த திருமால் சத்தம் கேட்டு எழுந்து வெளியில் என்ன நடக்கிறது? என்பதை பார்ப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றார்.

அடித்துக்கொலை

அப்போது மர்ம நபர்கள் சிலர் சிறுமின்விசை தொட்டியுடன் பொருத்தப்பட்டு இருந்த இரும்பு குழாய்களை உடைத்து, திருடி கொண்டிருந்தனர். இதைக் கண்ட திருமால் அவர்களை தட்டிக்கேட்க முயன்றார். மேலும் இரும்புக்குழாய்களை திருடிச்சென்ற திருடர்களை பிடிப்பதற்காக திருமால் பின்தொடர்ந்து விரட்டி சென்றார். தப்பி சென்ற திருடர்கள் தெருவின் ஒரு இடத்தில் திருமாலை எதிர்த்து நின்று, தாங்கள் திருடி வைத்திருந்த இரும்புக்குழாயாலேயே தலை, உடல் மீது சரமாரியாக தாக்கினர். அதில் மண்டை உடைந்து மூளை சிதறி திருமால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story