தமிழகத்தில் இன்று 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை!


தமிழகத்தில் இன்று 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை!
x
தினத்தந்தி 23 April 2022 8:44 AM IST (Updated: 23 April 2022 8:44 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இன்று (23.04.2022) சனிக்கிழமை ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.

பள்ளி மேலாண்மைக் குழுவின் கூட்டம் இன்று (ஏப்ரல் 23) அனைத்து அரசு பள்ளிகளில் நடைபெறுகிறது. 

அரசு பள்ளிகளின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளி வளர்ச்சியில் பெற்றோரின் பங்கும் இருக்க வேண்டும் என்பற்காகவும் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ன் அடிப்படையில், பள்ளி மேலாண்மை குழுக்கள் உருவாக்கப்பட்டன.

ஒவ்வொரு அரசு பள்ளியிலும் அமைக்கப்படும் பள்ளி மேலாண்மை குழுக்களில் 20 பேர் உறுப்பினர்களாக இருப்பர். இவர்களில் 15 பேர் பெற்றோர், அதிலும் 10 பேர் பெண்கள். மீதமுள்ள 5 நபர்களில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஆசிரியர்கள், கல்வி ஆர்வலர்கள், சுயஉதவிக்குழுவினர் இருப்பார்கள்.

அனைத்து நடுநிலைப் பள்ளிகளில் நிர்வாகக்குழு அமைக்கப்பட இருப்பதால் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் எனவும் மற்ற வகுப்பு மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

 மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை என்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story