ஜாமினில் வெளிவந்து வைரக் கற்கள் பறித்த வாலிபருக்கு ஆறு மாதம் சிறை..!
களக்காடு அருகே நன்னடத்தை வழக்கில் ஜாமினில் வெளிவந்து வைரக் கற்கள் பறித்த வாலிபருக்கு ஆறு மாதம் சிறைதண்டனை விதித்து தாசில்தார் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் ராஜபுதூர் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (27). இவர் மீது களக்காடு போலீசார் 109 பிரிவின் கீழ் நன்னடத்தை வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக முத்துகிருஷ்ணன் ஜாமீனில் வெளிவந்தார். ஜாமீனில் வெளி வந்த அவர் மதுரையை சேர்ந்த ஆன்லைன் வியாபாரி முரளி என்பவரை ஏமாற்றி 7 லட்சம் மதிப்புள்ள வைரக்கற்களை பறித்து சென்றார்.
இதுபோல அம்பை பகுதியில் ஒருவரை ஏமாற்றி இரு சக்கர வாகனத்தையும் திருடி சென்றார். இந்த திருட்டு வழக்குகள் தொடர்பாக களக்காடு போலீசார் முத்துகிருஷ்ணனை கைது செய்து நாங்குநேரி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் 109 பிரிவின் கீழ் நன்னடத்தை வழக்கில் ஜாமினில் இருந்த போதே திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதால் அவரை களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் நாங்குநேரி தாசில்தார் இசக்கிப்பாண்டி முன் ஆஜர் படுத்தினர்.
விசாரணை நடத்திய தாசில்தார், முத்துகிருஷ்ணனை 6 மாதம் சிறையில் அடைக்கும் படி உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து அவர் நாங்குநேரி சிறையில் காவலில் வைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story